Posts

Showing posts with the label #Grieving | #Friend | #Condoles | #Shinzo

நெருங்கிய நண்பரை இழந்து வாடுகிறேன்.. ஷின்சோ அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!1356023700

Image
நெருங்கிய நண்பரை இழந்து வாடுகிறேன்.. ஷின்சோ அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்! ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவரின் மறைவுக்கு இந்தியாவில் ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், "என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ஷின்சோ அபேவின் எதிர்பாராத மறைவு எனக்கு பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது துயரை பகிர்ந்துகொள்ள வார்த்தைகள் இல்லை. தலைசிறந்த நிர்வாகியும், பெருந்தன்மை மிக்க தலைவருமான ஷின்சோ அபே, தனது வாழ்நாளை ஜப்பானின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்தவர். ஷின்சோ அபேவுக்கும் எனக்குமான தொடர்பு பல ஆண்டு முன்னரே ஏற்பட்டது. நான் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே ஜப்பான் பிரதமராக இருந்த அவர் என்னோடு நட்போடு பழகி வருகிறார். பொருளாதாரம், உலக அரசியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஞானம் கொண்ட அவர்,என்னிடம் ஆழமான நட்பை கொண்டவர். அன்மையில் எனது ஜப்பான் பயணத்தின் போது கூட ஷின்சோ அபேவை சந்தித்து பேசி நீண்ட உரையாடலை மேற்கொண்டேன். அதுவே கடைசி சந்திப்பாக இருக்கும் என நான் நினைத்துப் பா...