கடுமையான பொருளாதார, அரசியல் நெருக்கடி! இலங்கையில் பொதுமக்கள் போராட்டம் உச்சகட்டம்!
கடுமையான பொருளாதார, அரசியல் நெருக்கடி! இலங்கையில் பொதுமக்கள் போராட்டம் உச்சகட்டம்! கடுமையான பொருளாதார, அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் விடியவிடிய கொட்டும் மழையில் மக்கள் போராட்டம் நடத்தினர். தற்கால அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய அதிபர் கோத்தபய முடிவு செய்துள்ளார். அதேநேரம் பாகிஸ்தானில் நடந்தது போல் கோத்தபய ஆட்சியை கவிழ்க்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் பதற்றமான நிலையே நீடிக்கிறது. வரலாறு காணாத இந்த நெருக்கடியால் தீர்வு காண வழிதெரியாமல் ஆளும் ராஜபக்சேக்களின் அரசு திணறி வருகிறது. நாடாளுமன்றத்தில் 3 நாட்களாக விவாதம் நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனவே அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட...