தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த கனிமொழி எம்பி..!
தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த கனிமொழி எம்பி..! திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த விஜய் மற்றும் முருகன் ஆகிய இரு நபர்களையும் இன்று நேரில் சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் கனிமொழி எம்பி. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.