வைகோவுடன் திடீர் சந்திப்பு பாமக தலைவராக பதவி ஏற்றது ஏன்? அன்புமணி விளக்கம்879699155
வைகோவுடன் திடீர் சந்திப்பு பாமக தலைவராக பதவி ஏற்றது ஏன்? அன்புமணி விளக்கம் பாமக தலைவர் அன்புமணி கூறியதாவது: பாமகவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து வருகிறேன். அந்த வகையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். பாஜ தலைவர் அண்ணாமலை ஊடகங்கள் குறித்து பேசியது தவறு. ஊடகங்கள் தான் சமுதாயத்தின் 4வது தூண். அவர்களை என்றும் போற்ற வேண்டும். நல்ல மாற்றங்கள் அவர்கள் மூலம் தான் வருகிறது. பாமகவின் தலைவர் என்றும் ஜிகே மணி தான். 2.0 திட்டத்திற்காக தான் நான் தலைவராக பதவியேற்றேன். இவ்வாறு அவர் கூறினார்.