மக்களே உஷார்..! இன்று 10 மாவட்டங்களில் மழை.. தொடர்ந்து 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை!
மக்களே உஷார்..! இன்று 10 மாவட்டங்களில் மழை.. தொடர்ந்து 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை! தென் தமிழகம் உட்பட10 மாவட்டங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” இலங்கை மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 25.04.2022: தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26.04.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும்அதனை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்இடி மின்னலுடன்...