பிரதமர் மோடியை கொல்ல சதி? 20 கிலோ RDX வெடி பொருளுடன் 20 ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவேட் செய்யப்பட்டதாக மிரட்டல் கடிதம்
பிரதமர் மோடியை கொல்ல சதி? 20 கிலோ RDX வெடி பொருளுடன் 20 ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவேட் செய்யப்பட்டதாக மிரட்டல் கடிதம் பிரதமர் மோடியை கொல்வதற்கு சதி நடந்துள்ளதாகவும், இதுதொடர்பாக 20 கிலோ வெடி பொருட்களுடன் 20 ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவேட் செய்யப்பட்டதாகவும் வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய புலனாய்வு முகமையான NIA-வுடைய மும்பை பிரிவுக்கு வந்துள்ள இ மெயிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய பாதுகாப்பு படைகள் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இ மெயில் அனுப்பி நபர், தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும், இதனால் சதி குறித்த விபரங்கள் வெளியே தெரியாது என்றும் மெயிலில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியை கொல்லும் வேலைக்காக குறைந்த 20 ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் சுமார் 20 கிலோ அளவுக்கு ஆர்.டி.எக்ஸ். வெடி பொருட்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் என்.ஐ.ஏ.வுக்கு வந்த இ மெயிலில், சதித் திட்டத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இறுதிக்கட...