Posts

Showing posts with the label #Tariff

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறதா?1506465994

Image
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறதா? தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயாக அரசு நிர்ணயம் செய்தது. அத்துடன் கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ரூபாய் கட்டணம் என்று இருந்தது. அத்துடன், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்திற்கு 3 ரூபாய் 50 காசுகள் எனவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், விலைவாசி உயர்ந்ததால் அரசின் பரிந்துரையை ஆட்டோ ஓட்டுனர்கள் ஏற்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதே சமயம் ஓலா, உபேர் உள்ளிட்ட தனியார் செயலி வழி நிறுவனங்கள் ஆட்டோக்களை இயக்கின. தற்போது 80 சதவீதத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் இத்தகைய செயலி நிறுவனங்களுடன் இணைந்துள்ளன. இதை பயன்படுத்தி செயலி நிறுவனங்கள் ஓட்டுனர்களிடம் அதிக கமிஷன் வசூலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசே ஆட்டோக்களுக்கான செயலியை வடிவமைத்து ‘டிஜிட்டல் மீட்டர்’ வழங்கி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும், தனியார் செயலிகளை விட குறைந்த கமிஷன் பெற்று, அதன் ஒரு பகுதியை நல வாரியத்தின் மூல...