விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் கதாபாத்திர பெயர்கள் என்ன தெரியுமா? சம்பவம் லோடிங்!
விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் கதாபாத்திர பெயர்கள் என்ன தெரியுமா? சம்பவம் லோடிங்!
கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன், ஷிவானி நாராயணன், மைனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த படத்தில் விக்ரம் எனும் ரிட்டயர்ட் போலீஸ் அதிகாரியாக கமல் நடிக்கிறார் என்றும் அவரது மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய்சேதுபதி வில்லனாக விக்ரம் படத்தில் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பவானியாக ஜேடியை அலற வைத்தை விஜய்சேதுபதி சூலக்கருப்பனாக விக்ரம் கமலுடன் நேருக்கு நேர் மோத போகிறார். கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகள் இந்த படத்திலும் வெறித்தனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் எனும் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் இந்த படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள பகத் ஃபாசில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக நடிகர் கமல்ஹாசன் தனக்கான சில ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளில் பாடி டபுள் பயன்படுத்தி நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், டி-ஏஜிங் எனும் தொழில் நுட்பத்திற்காக 10 கோடி ரூபாய் வரை செலவு செய்து கமல்ஹாசனை இளமையாக சில பிளாஷ்பேக் காட்சிகளில் காட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
ஜூன் 3ம் தேதி உலகளவில் வெளியாக உள்ள விக்ரம் திரைப்படத்தின் புரமோஷன் பணிகளை இப்போதிருந்தே தயாரிப்பு தரப்பு ஆரம்பித்துள்ளது. ரயில்களில் பிரம்மாண்ட விக்ரம் பட போஸ்டர்களை ஒட்டி புரமோஷனை கிக் ஸ்டார்ட் செய்துள்ளது. வலிமை, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் விக்ரம் படம் முந்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Comments
Post a Comment