பாரதியை அசிங்கப்படுத்தி அனுப்பிய கண்ணம்மா.! இந்த அசிங்கம் தேவைதானா..
பாரதியை அசிங்கப்படுத்தி அனுப்பிய கண்ணம்மா.! இந்த அசிங்கம் தேவைதானா..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாரதி கண்ணம்மா என்னும் நாடகத் தொடர் மக்களால் இன்றளவும் விரும்பி பார்க்கப்படும் ஒரு தொடர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகங்களில் உள்ள கதைகளும் அக்கதைகளில் வரும் டுவிஸ்ட்டுகளுமே விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பிக்கு காரணம்.
இந்த நாடகத்தில் புதிதாக என்ட்ரி கொடுத்த விக்ரம் என்பவர் மருத்துவமனை ஒன்றை திறந்துள்ளார் அங்கு கண்ணமாவிற்கு அட்மினிஸ்டேடர் வேலையும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாரதியும் கண்ணம்மாவும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் நிலை ஏற்படும். பாரதியும் மருத்துவமனையில் உள்ள கேன்டீனுக்கு செல்கிறார்.
அங்கு கண்ணம்மா ஏதாவது சாப்பிடுறீங்களா? என்று கேட்கிறார், அதற்கு பாரதி உன்னுடைய மாவை எல்லாம் இங்கு விற்க நினைக்கிறாயா? என்று கிண்டல் செய்கிறார். அதற்கு கண்ணம்மா எனக்கு அந்த அவசியம் தேவையில்லை ஏனென்றால் ஏற்கனவே என்னுடைய மாவிற்கு அதிக டிமாண்ட் இருக்கு, அதை வேணும்னு கேக்குறவங்களுக்கே என்னால தர முடியல அதனால நான் இங்க வச்சு விக்கனும்னு எந்த அவசியமும் இல்லை என அழகான பதிலடி தருகிறார்.
மேலும் கண்ணம்மா நான் சமையல் அம்மா அல்ல அட்மினிஸ்டேட்டர் என்று கூறிவிட்டு பின் ‘நாங்க வரகு அரிசியில் பொங்கல் செஞ்சிருக்கோம் சாப்பிடுறீங்களான்னு” கேட்டு கடுப்பேத்துகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது கண்டிப்பாக பாரதியும் கண்ணம்மாவும் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள் என்று தெரியவருகிறது.
மேலும் வெண்பாவை வெளியே எடுத்து வந்த அவரது அம்மா ஷர்மிளா நான் நாளைக்கே உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் கல்யாணம் செய்துகொள் என்று கூறுகிறார், கண்ணம்மாவும் பாரதியும் நெருக்கமாக ஆகிவிட்டாள் வெண்பாவின் திருமணம் நிச்சயம் நடக்கும். இதனால் நாடகம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
Comments
Post a Comment