ஓங்கட்டும் மனிதாபிமானம்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை உணவுக்குக்கூட அல்லல்படும் அளவுக்கு தவிக்கும் இலங்கை மக்கள், தற்போது குடும்பம் குடும்பமாக தமிழகத்தை நாடி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தமிழக அரசு நாடியது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ‘‘கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க மத்திய...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment