திமுகவை பாடாய் படுத்திய கம்யூனிஸ்ட்; பதவியேற்ற சில நிமிடங்களில் நெருக்கடி!
நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல குழு தலைவராக திமுகவை சேர்ந்த உறுப்பினர் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவருக்கான அலுவலகத்தைதிமுகசட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து மண்டல தலைவராக பிரான்சிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் பொறுப்பேற்ற கையோடு பாளையங்கோட்டை மண்டல கூட்டம் தலைவர் பிரான்சிஸ், உதவி ஆணையர் ஜகாங்கிர் பாஷா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ள பொது மக்களின் பிரச்சினைகள் குறித்து மண்டல தலைவரிடம் முறையிட்டனர்.
Comments
Post a Comment