தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? ஊருக்குள் நுழைந்த XE வகை கொரோனா வைரஸ்?
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? ஊருக்குள் நுழைந்த XE வகை கொரோனா வைரஸ்?
மற்ற கொரோனா வைரஸ்களை விட மிகவும் வீரியம் மிக்கதாக உள்ள XE வகை வைரஸ் சமீபத்தில்கூட குஜராத்தில் உள்ள ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் XE வகை வைரஸ் பரவி கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
XE வகை கொரோனா வைரஸ்:
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த தொற்றை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும், இரண்டு தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் ஓரளவுக்கு பின்பற்றியதால் தான் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ளதால் இனி தமிழகத்தில் மாஸ்க் அணிய தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்படி மக்கள் சுதந்திரமாக மாஸ்க் அணியாமல் சுற்றி திரிந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு செய்தி பரவி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது கொரோனா வைரஸ் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரு வைரஸும் கலந்து XE என்னும் வைரஸ் பரவி வருகிறது. மற்ற வைரஸ்களை விட XE வைரஸ் வீரியம் மிக்கதாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த எக்ஸி வகை வைரஸ் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தான் முதல் முதலில் கண்டறியப்பட்டது. அதற்கு பிறகு இந்தியாவிலும் முதன்முதலாக குஜராத்திலுள்ள ஒருவருக்கு இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழகத்திலும் XE வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தற்போது விளக்கமளித்துள்ளார். அதாவது தமிழகத்தில் பிஏ.2 வகை வைரஸ் தான் பரவிக்கொண்டிருக்கிறது. XE வகை வைரஸ் இதுவரைக்கும் பரவவில்லை. எனவே இதுபோன்ற வதந்திகளை நம்பி மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த XE வகை வைரஸ் இந்தியாவிலும் பரவாமல் தடுக்க நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment