ரசிகர்களுக்கு நல்ல செய்தியை சொன்ன விஜய் டிவி – “பிக்பாஸ் 6” எப்போது தொடங்கப் போகுது தெரியுமா.?


ரசிகர்களுக்கு நல்ல செய்தியை சொன்ன விஜய் டிவி – “பிக்பாஸ் 6” எப்போது தொடங்கப் போகுது தெரியுமா.?


சின்னத்திரையில் விஜய் டிவியில் படும் ஹிட்டாக ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் பலரின் பேவ்ரெட் நிகழ்ச்சியாகும். அந்த வகையில் இந்த பிக்பாஸ் முதல் சீசன் தொடங்கி தற்போது வரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனுமே மக்களுக்கு ஏதாவது ஒரு கருத்தை தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்து தொடங்க உள்ள ஆறாவது சீசனுக்கும் மக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களையும் கமலஹாசன்.

தொகுத்து வழங்கி வந்த நிலையில் கடைசியாக ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் இல் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி நிறைவடைந்தது இந்த நிகழ்ச்சியையும் கமலஹாசன் தொடங்கி வைத்தார் பின்பு இடையில் சில காரணங்களால் அவர் வெளியேறியதை அடுத்து சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி  முடித்து வைத்தார்.

ஓடிடி தளத்தில் வெளியான இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் லைவாக ஒளிபரப்பாகிய நிலையிலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த 6வது சீசன் எப்போது தொடங்கும்.

என்ற எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் இடையே நிலவி வந்த நிலையில் அதற்கான தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி பிக் பாஸ் சீசன் 6 வருகின்ற ஜூன் மாத இடையில் அல்லது ஆகஸ்ட் மாத முதலில் தொடங்கும் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை அறிந்த பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

Comments

Popular posts from this blog