இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகள்!
இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகள்!
இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வில் ஒரு சில கேள்விகள் தவறான கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ்நாடு அரசு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு இன்று நடத்தப்பட்டது. சுமார் 10லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் வழக்கம்போல் ஆங்கிலம், பொது தமிழ் உள்ள மொழி கேள்விகள் மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் கூறியுள்ளனர். அதேபோல் கணிதப் பிரிவில் கேட்கப்பட்ட 25 கேள்விகள் மிகவும் எளிதாக இருந்ததாக கூறினார்கள்.
மேலும் வழக்கம்போல் இந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் சில தவறான கேள்விகள் கேட்கப்பட்டது என தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தவறாக இருந்ததாகவும், மேலும் ஜானகி அம்மாள் என்ற தாவரவியலாளர் குறித்த கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்தது என்றும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியில் தமிழில் ஒரு மாதிரியும் அதை மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலத்தில் ஒரு மாதிரியாக இருந்தது என்றும் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment