பொத்தி பொத்தி வச்ச ரகசியத்தை போட்டு உடைத்த உதயநிதி ஸ்டாலின் – மனவேதனையில் சிவகார்த்திகேயன்.!
பொத்தி பொத்தி வச்ச ரகசியத்தை போட்டு உடைத்த உதயநிதி ஸ்டாலின் – மனவேதனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகர் சிவகார்த்திகேயன் சிபிச்சக்கரவர்த்தி உடன் முதல் முறையாக கைகோர்த்து நடித்த திரைப்படம் தான் டான். இந்த படம் காமெடி சென்டிமென்ட் என அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்றும் ஹவுஸ்புல்லாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதன் காரணமாக வசூலும் நன்றாகவே அள்ளி வருகின்றது. இதுவரை தமிழகத்தில் மட்டுமே 40 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது வருகின்ற நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி அசத்தும் என தெரியவருகிறது இந்த திரைப்படத்தை ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை வாழ்க்கை உள்ளனர்.
அண்மையில் கூட இந்த படத்தை பார்த்து ரஜினி அரைமணிநேரம் அழுதாராம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படத்தை எடுப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் என்னவாக இருக்கும் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தலைப்பு உண்மையை போட்டு உடைத்து விட்டாராம். இது சிவகார்த்திகேயனுக்கும் சரி, படக்குழுவுக்கு சரி அதிர்ச்சியை கொடுத்ததாம். கதைக்கு ஏற்றபடி மாவீரன் டைட்டில் செம சூப்பராக இருந்ததால் கடைசி நேரத்தில் டைட்டிலை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக கொடுக்க அதிகம் ஆர்வம் காட்டியது.
ஆனால் உதயநிதி ஸ்டாலின் உண்மையை சொன்னது தற்பொழுது அவர்களுக்கு தலைவலியை ஏற்பட்டுள்ளது. இதனால் தலைப்பை கூட மாற்றி விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறாராம். சிவகார்த்திகேயன் தனது நெருங்கிய நண்பர்களிடம் இதைச் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
Comments
Post a Comment