இதுதாங்க என் படங்களின் தோல்விக்கு காரணம்…கண்டுபிடித்த சிவகார்த்திகேயன்


இதுதாங்க என் படங்களின் தோல்விக்கு காரணம்…கண்டுபிடித்த சிவகார்த்திகேயன்


சமீபகாலமாக கோலிவுட் வட்டாரத்தில் அதிகமாக பேசப்படும் நபர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். யாருங்க இவரு? எங்க இருந்து வந்தாரு? அப்படினு எல்லாருமே வாயை பிளக்கும் அளவிற்கு சிவகார்த்திகேயனின் வெற்றி உள்ளது.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இதுதவிர கைவசமும் நிறைய படங்களை வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். ஆனால் இந்த வெற்றியை இவர் எளிதாக அடையவில்லை.

sivakarthikeyan

முன்னதாக எந்தவித அனுபவமும் இன்றி பட தயாரிப்பில் இறங்கியதால் சிவகார்த்திகேயன் தொடர் தோல்வி மற்றும் கடன் தொல்லையில் சிக்கி அவதிப்பட்டார். அதன் பின்னர் டாக்டர் படம் தான் இவரை ஓரளவிற்கு அந்த தோல்வியில் இருந்து தூக்கி விட்டது என்று கூறலாம்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் அவரது படங்களின் தோல்வி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “என்னுடைய சில படங்களின் கதை கருவிலேயே பிரச்சனை இருந்தது. ஆரம்பத்தில் என்னுடைய படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

sivakarthikeyan

அதன்பின் சில படங்கள் நன்றாக போகவில்லை. இதற்கு காரணம் என்ன என்று யோசித்தபோது, கமர்ஷியல் மட்டும் மக்களுக்கு போதாது, வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என்பது தெரியவந்தது. அதைதான் இப்போது கொடுக்க முயற்சித்து வருகிறேன்” என கூறியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog