இன்ஜினியரிங், மேனேஜ்மென்ட் கல்வி கட்டணம் விரைவில் மாற்றம்.. எவ்வளவு தெரியுமா?


இன்ஜினியரிங், மேனேஜ்மென்ட் கல்வி கட்டணம் விரைவில் மாற்றம்.. எவ்வளவு தெரியுமா?


இந்தியாவில் பொறியியல் படிப்புக்குக் குறைந்தபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ.68,000 ஆக இருக்க வேண்டும் என்ற அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (AICTE) பரிந்துரையைக் கல்வி அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இப்போது அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களுக்கும் அதை செயல்படுத்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இப்போது இஞ்சினியரிங் படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 50,000 ரூபாயாகவும், மேனேஜ்மெண்ட் இடங்களுக்கான கட்டனம் 87,000 ரூபாயாகவும் உள்ளது.

மாதம் ரூ.25000 சம்பளமா.. அப்போ நீங்க டாப் 10% எலைட் மக்கள்..!

ஏஐசிடிஇ பரிந்துறை படி பொறியியலில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்புக்கான குறைந்தபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ. 67,900 ஆகவும், அதிகபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ. 1,40,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் நான்கு ஆண்டு பட்டப்படிப்புக்கு, குறைந்தபட்ச கட்டணம் ஆண்டுக்கு ரூ.79,600 ஆகவும், அதிகபட்சமாக ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொறியியலில் முதுகலை பட்டப்படிப்புக்கான கட்டண வரம்பு ரூ.1,41,200 முதல் ரூ.3,04,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்கன முதுதுகலை கட்டணம் குறைந்தபட்சம் 85 ஆயிரம் ரூபாயிலிருந்து 1,95,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு எல்லாம் பொறியியல் மற்றும் மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்கு அதிகபட்ச கட்டணம் எவ்வளவு என்று பட்டுமே நிர்ணையம் செய்யப்படும். ஆனால் முதல் முறையாக இந்த ஆண்டு குறைந்தபட்ச, அதிகபட்ச கட்டணங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் நிர்ணயமானது ஆந்திரா, கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கருத்துக்களைப் பெற்று, அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்னர் முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

பிற படிப்புகள்

பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கலை மற்றும் கைவினைப்பொருட்கள், MCA உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப படிப்புகளுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணங்களை இந்த குழு பரிந்துரைத்துள்ளது.

எப்போது முதல் அமலுக்கு வரும்?

புதிய கட்டணம் முறை வரும் கல்வியாண்டு முதலே அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. எனவே வரும் ஆண்டு முதல் எல்லா மாநிலங்களிலும் கல்லூரி கட்டணங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Comments

English summary

First Time In History Govt may fixes minimum - maximum annual fee slabs for engineering, management courses likely soon

Comments

Popular posts from this blog