வேற லெவலில் குறைந்த தங்கம்.. நகை வாங்குவோர் மகிழ்ச்சி!
வேற லெவலில் குறைந்த தங்கம்.. நகை வாங்குவோர் மகிழ்ச்சி!
நகை வாங்குவோருக்கு இன்று நல்ல செய்தி வந்துள்ளது. தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. மீண்டும் விலை உயர்வதற்குள் உடனே நகை வாங்கினால் நல்லது. சென்னையில் இன்று (மே 2) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,855 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,903 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 39,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 384 ரூபாய் குறைந்து 38,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தூய தங்கத்தின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 5,302 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,254 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, நேற்று 42,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 384 ரூபாய் குறைந்து 42,032 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,798 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,798 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,798 ஆகவும், கேரளாவில் ரூ.4,858 ஆகவும், டெல்லியில் ரூ.4,798 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,798 ஆகவும், ஒசூரில் ரூ.4,890 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,887 ஆகவும் இருக்கிறது. வெள்ளி விலையும் அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.69.50 ஆக இருந்தது. இன்று அது ரூ.67.60 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Comments
Post a Comment