Monkey flu threatening the world! -502097553


உலகை அச்சுறுத்தும் குரங்கு காய்ச்சல்! பெருந்தொற்றாக உருவெடுக்குமோ! அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்!


கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், மங்கி பாக்ஸ் எனப்படும் ஒரு வகை குரங்கு காய்ச்சல் நோய் பரவத் தொடங்கி உள்ளது. இது அடுத்த பெருந்தொற்றாக உருவெடுக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல் உள்ளிட்ட உலகின் சுமார் 12 நாடுகளில், 92 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் குரங்கு காய்ச்சல்  காரணமாக பங்களாதேஷ் சுகாதார எச்சரிக்கையை அறிவித்துள்ளது.

பங்களாதேஷில் இதுவரை குரங்கு காய்ச்சலின் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் தனித்தனியாக ஸ்கிரீனிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல் உட்பட உலகின் சுமார் 12 நாடுகளில் குரங்கு காய்ச்சல் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 92 பேர்  குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் (WHO) கூறுகிறது இந்த நோயைப் பற்றி மேலும் அறிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.

குரங்கு காய்ச்சல் பரவுவது எப்படி

குரங்கு காய்ச்சல் கடுமையாக தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது. இது பறவை காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தொடங்குகிறது. முதலில் நிணநீர் மண்டலங்களில் வீக்கம் ஏற்படுகிறது, பின்னர் முகம் மற்றும் உடலில் சொறி தோன்றும். பொதுவாக, அதன் தொற்று இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். அதன் தொற்று உடலில் இருந்து வெளியேறும் திரவம், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்கள், போன்றவற்றின் மூலம் பரவலாம்.

நோய்கான அறிகுறிகள் 

பெரியம்மை நோயுடன் ஒப்பிடும்போது குரங்கு தொற்று லேசானதாகக் கருதப்படுகிறது. உடலில் கொப்புளங்கள் இருப்பதுடன், காய்ச்சல் பாதிப்பும் இருக்கும். சளி, தலைவலி, தசை வலி, சோர்வு போன்றவை இந்த நோயின் மற்ற அறிகுறிகளாகும். இப்போதைக்கு விழிப்புணர்வோடு இருப்பதன் மூலம் தான் அதைத் தவிர்க்க முடியும். பெரியம்மை தடுப்பூசி இந்த நோயில் 85 சதவீதம் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் குரங்கு காய்ச்சல்

இதுவரை இந்தியாவில் இந்த நோயின் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை, ஆனால் மற்ற நாடுகளில் பரவுவதைக் கருத்தில் கொண்டு, கவனமாக இருப்பது மிகவும் முக்கியம். இது தொடர்பாக ஓரின சேர்க்கையாளர்களுக்கு சிறப்பு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

30 Newest Short Pixie Haircuts

R woodworking