கேம்பஸ் வேலைவாய்ப்பில் சென்னை ஐஐடி சாதனை! ரூ.1 கோடியே 98 லட்சம் வரை சம்பளம்!2121856321
கேம்பஸ் வேலைவாய்ப்பில் சென்னை ஐஐடி சாதனை! ரூ.1 கோடியே 98 லட்சம் வரை சம்பளம்!
2020-21 கல்வியாண்டில், வளாக வேலைவாய்ப்புகள் வாயிலாக (campus placement), முன்னெப்போதும் இல்லாத அளவு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகசென்னைஐஐடி தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வளாக வேலைவாய்ப்புகளின் மூலம் ஆண்டுக்கு ரூ. 21.48 லட்சம் சராசரி சம்பளமாக வழங்கப்பட்டதாகவும், அதிகபட்சமாக USD 250,000 (இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடி 98 லட்சம் ஆகும்) வரை பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
2021-22ம் கல்வியாண்டில் இரண்டு கட்டமாக நடைபெற்ற வளாக வேலைவாய்ப்புகளில் 380 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 1,199 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கூடுதலாக, Summer Internship மூலம் கிடைத்த 231 (pre placement offer) ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 1,430 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 2018-19ம் கல்வியாண்டில் கிடைத்த 1,151 வேலைவாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.
இதுகுறித்து, சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், "14 நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 45 சர்வதேச வேலைவாய்ப்புகளும் இதில் அடங்கும். இந்த எண்ணிக்கையும் கூட சாதனை அளவாகும். தவிர, 131 புத்தாக்க நிறுவனங்கள் முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட வளாக வேலைவாய்ப்பின்போது 199 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன. நடப்பு சீசனில் 61 எம்.பி.ஏ. மாணவர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளதால், ஐஐடி மெட்ராஸ்-ன் மேலாண்மைக் கல்வித்துறை 100 விழுக்காடு வேலைவாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறை வாரியாக வேலைவாய்ப்பு விவரம்:
துறைகள்% பணி நியமனம்
தரவு அறிவியல் & பகுப்பாய்வு17
அடிப்படைப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்42
நிதிச் சேவைகள்6
தகவல் தொழில்நுட்பம் & மென்பொருள் தயாரிப்பு17
மேலாண்மை6
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு10
கல்வி2
2021-22ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு வழங்கிய நிறுவனங்கள்
வரிசை எண்நிறுவனம்வேலைவாய்ப்பு
1எக்சல் சர்வீஸ்28
2ஓலா27
3இஒய் இந்தியா23
4அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்22
5மைக்ரோசாப்ட் இந்தியா பி.லிட்19
6இக்வியா18
7லார்சன் & டூப்ரோ17
8என்ஃபேஸ் எனர்ஜி17
9குவால்கம்17
10கோடக் மஹிந்திரா வங்கி17
11டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்15
12பஜாஜ் ஆட்டோ லிட்15
13டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிட்.14
14டெலாய்ட் இந்தியா14
15இண்டெல்14
16நைஜீரியா13
17வெல்ஸ் ஃபார்கோ இண்டர்நேஷனல் சொலுசன்ஸ் பி. லிட்.13
18கோல்ட்மேன் சாக்ஸ்& கோ எல்எல்சி13
19இண்டஸ் இன்சைட்ஸ் & அனாலிடிக்கல் சர்வீசஸ் பி.லிட்12
20ப்ளிப்கார்ட் இண்டர்நெட் பி.லிட்12
ஐஐடி மெட்ராஸ் ஆலோசகரும் (பணியமர்த்தல்) வெளியேறும் பேராசிரியருமான சி.எஸ்.சங்கர் ராம் கூறுகையில், "கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் மதிப்புக் கூட்டல் விளைவுகளை, அவர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகள்தான் பிரதிபலிக்கின்றன. 2021-22ம் ஆண்டில் சாதனை அளவாக அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புக் கிடைக்கும் வகையில் எங்கள் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment