ட்ரோன் கேமிரா 79,000 ரூபாய்க்கு ஆர்டர்! பார்சலில் வந்ததோ பொம்மை கார்! பிளிப்கார்ட்டில் குளறுபடி சிவந்தாங்கலை சேர்ந்த ஏசி மெக்கானிக்கான மொய்தீன், நண்பர் சுரேஷிற்காக கிரெடிட் கார்டு மூலம் 79,064 ரூபாய் செலுத்தி 20 ஆம் தேதி ட்ரோன் கேமராவுக்கு ஆர்டர் செய்துள்ளார். அதன்படி பார்சல் வந்தபோது, அது தட்டையாக இருப்பதை கண்டு சந்தேகம் கொண்டு 2 பேரும் வீடியோ பதிவு செய்து திறந்தபோது பொம்மை கார் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு அவர்கள் புகார் அளிக்கவே, விசாரணை நடத்தப்படும் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.