மீண்டும் ஆட்டக்களத்தில் ஜடேஜா; குஷியில் ரசிகர்கள்!157550718
மீண்டும் ஆட்டக்களத்தில் ஜடேஜா; குஷியில் ரசிகர்கள்!
இந்திய அணியின் ஜெர்சியை மீண்டும் அணிய உள்ளது தன்னை மகிழ்ச்சியாக உணர வைக்கிறது என நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடுவதற்காக சென்னை வந்துள்ளார். ஜடேஜா கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பைக்குப் பிறகு எந்தவித சர்வேதச போட்டியிலும் விளையாடவில்லை.
ஆசியக் கோப்பையில் ஹாங்ஹாங் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜடேஜா இருபது ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற போட்டிகளிலும் ஜடேஜா பங்கேற்கவில்லை.
இதைத்தொடர்ந்து, சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீரான நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணியில் ஜடேஜா இடம்பெற்றார்.
ஆனால், இப்போட்டிக்கு முன்பாக அவர் தன் உடல்தகுதியை முதல்தர போட்டியின் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற சவுராஸ்டிரா மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையே ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஜடேஜா பங்கேற்று சிறப்பாக விளையாடினார்.
இதனால், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஜடேஜா விளையாட உள்ளது அதிகாரப்பூர்வமாகியுள்ளது. இது குறித்து ஜடேஜா ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அந்த நேர்காணலில், ‘5 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியின் ஜெர்சியை மீண்டும் அணிய உள்ளேன். நான் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் உள்ளேன்.’ என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment