பேருந்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் பலி!!!
பேருந்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் பலி!!!
பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் தனியார் பேருந்தில் படியில் தொங்கியவாறு பயணம் செய்த கல்லூரி மாணவன் தவறி விழுந்து பலி ஒரு மாணவன் படுகாயம்..
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன்லால் வயது 19 இவர் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி STC தனியார் கல்லூரியில் BSC கம்ப்யூட்டர் சைன்ஸ் பயின்று வந்தார்.
இவர் உடுமலையில் அறை எடுத்து தங்கியுள்ளார் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று மாலை கல்லூரி முடிந்ததும் நண்பர்களுடன் கோவையில் இருந்து பழனி செல்லும் SRK என்ற தனியார் பேருந்தில் ஏறியுள்ளார் கூட்டம் அதிகமாக இருந்ததால் படியில் தொங்கியவாரு பயணம் செய்துள்ளார்
அப்போது வேமாக சென்ற பேருந்து திப்பம்பட்டி அருகே ஒரு வளைவில் திரும்பும் போது படியில் இருந்த மாணவன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார்
இதில் பேருந்தில் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மதன்லால் பரிதாபமாக உயர்ந்தார், மேலும் ஆல்வின் (19) என்ற மாணவன் படுகாயம் அடைந்தார்.
காயமடைந்த மாணவன் ஆல்வின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment