பெற்றோர் பேசிக் கொள்வதில்லை என்றால், அது குழந்தைகளை எந்த அளவுக்கு பாதிக்கும்... பண்டைய காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஒரு வீட்டில் கணவன், மனைவி பேசிக் கொள்ளவில்லை என்றால் மற்றவர்கள் சமாதானம் செய்து வைத்து விடுவார்கள். அப்படியே பேசிக் கொள்ளாமல் இருந்தாலும் சித்தப்பா, சித்தி, பெரியப்பா, தாத்தா, பாட்டி என மற்றவர்களுடன் குழந்தைகள் உறவாடும்போது, தங்கள் பெற்றோருக்கு இடையிலான சண்டை, சச்சரவுகள் அவர்களுக்கு தெரியாமல் இருந்தன. ஆனால், இன்றைக்கு கூட்டுக் குடும்பங்கள் ‘க்யூட் குடும்பம்’ என்ற அளவில் சிறிய குடும்பமாக மாறிவிட்டது. தாய், தந்தை மற்றும் பிள்ளைகள் மட்டுமே உள்ள சின்ன குடும்பம். இதிலும், காலத்தின் கட்டாய தேவையால் பெற்றோர் இருவருமே வேலைக்கு சென்று விடுகின்றனர். ஆகவே, பெற்றோருக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் என்பது அருகி வருகிறது. அதிலும், சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டுவிட்டால் சொல்லவே வேண்டாம். நீண்டதொரு அமைதி அவர்களிடையே நிலவுகிறது. இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகளும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என்பது தான் சோகமான விஷயமாக இருக்கிறது. எவையெல்லாம் தவறான விஷயங்கள...
Comments
Post a Comment