ஷாக் கொடுக்கும் தங்கம் விலை! இன்று (11-02-2023) இன்று (11-02-2023) தங்கம், வெள்ளி விலை நிலவரம். தங்கம் விலை நிலவரம் 11 பிப் : 1 கிராம் ₹5,340.00, 1 சவரன் ₹42,720.00 10 பிப் : 1 கிராம் ₹5,320.00, 1 சவரன் ₹42,560.00 வெள்ளி விலை நிலவரம் 11 பிப் : 1 கிராம் ₹72.70, 1 கிலோ ₹72,700.00 10 பிப் : 1 கிராம் ₹72.50, 1 கிலோ ₹72,500.00
மீண்டும் ஆட்டக்களத்தில் ஜடேஜா; குஷியில் ரசிகர்கள்! இந்திய அணியின் ஜெர்சியை மீண்டும் அணிய உள்ளது தன்னை மகிழ்ச்சியாக உணர வைக்கிறது என நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடுவதற்காக சென்னை வந்துள்ளார். ஜடேஜா கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பைக்குப் பிறகு எந்தவித சர்வேதச போட்டியிலும் விளையாடவில்லை. ஆசியக் கோப்பையில் ஹாங்ஹாங் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜடேஜா இருபது ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற போட்டிகளிலும் ஜடேஜா பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து, சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீரான நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணியில் ஜடேஜா இடம்பெற்றார். ஆனால், இப்போட்டிக்கு முன்பாக அவர் தன் உடல்தகுதியை முதல்தர போட்டியின் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற சவுராஸ்டிரா மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு...
பேருந்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் பலி!!! பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் தனியார் பேருந்தில் படியில் தொங்கியவாறு பயணம் செய்த கல்லூரி மாணவன் தவறி விழுந்து பலி ஒரு மாணவன் படுகாயம்.. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன்லால் வயது 19 இவர் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி STC தனியார் கல்லூரியில் BSC கம்ப்யூட்டர் சைன்ஸ் பயின்று வந்தார். இவர் உடுமலையில் அறை எடுத்து தங்கியுள்ளார் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று மாலை கல்லூரி முடிந்ததும் நண்பர்களுடன் கோவையில் இருந்து பழனி செல்லும் SRK என்ற தனியார் பேருந்தில் ஏறியுள்ளார் கூட்டம் அதிகமாக இருந்ததால் படியில் தொங்கியவாரு பயணம் செய்துள்ளார் அப்போது வேமாக சென்ற பேருந்து திப்பம்பட்டி அருகே ஒரு வளைவில் திரும்பும் போது படியில் இருந்த மாணவன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார் இதில் பேருந்தில் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மதன்லால் பரிதாபமாக உயர்ந்தார், மேலும் ஆல்வின் (19) என்ற மாணவன் படுகாயம் அடைந்தார். க...
சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை புதுடெல்லி: சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. கடன் செயலிகள் மூலம் கடன்பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் தொடர்கின்றன. அதேபோல, சூதாட்டச் செயலிகளால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய செயலிகள் பெரும்பாலும் சீன நிறுவனங்களால் இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், இந்த செயலிகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குழந்தை திருமணம்..2 ஆயிரம் பேர் கைது..அஸ்ஸாமில் வெடிக்கும் போராட்டம்.! அஸ்ஸாமில் குழந்தை திருமண விவகாரத்தில் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து, பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் மனைவியிடம் ரூ10 லட்சம் மோசடி கொலை மிரட்டல் போலீசில் புகார் ஆக்ரா: இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர், அவரது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஜெயா பரத்வாஜ் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். அவர் விளம்பர நிறுவனத்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இந்த நிலையில், தீபக் சாஹரின் தந்தை லோகேந்திர சாஹர் நேற்று(பிப்.2), பாரிக் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் துருவ் பாரிக் மற்றும் அவரது தந்தையும், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் மேலாளருமான கமலேஷ் பாரிக் மீது போலீசில் புகார் அளித்தார். அதில், "பாரிக் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ஜெயா பரத்வாஜ் உடன் 10 லட்சம் ரூபாய்க்கு ஷூ விற்பனை தொடர்பான ஒப்பந்தம் மேற்கொண்டனர். ஆனால், வேலை முடிந்த பிறகு ஒப்பந்தப்படி ஜெயா பரத்வாஜுக்கு பணத்தை வழங்கவில்லை. இது தொடர்பாக ஜெயா அவர்களை தொடர்பு கொண்டுகேட்டபோது, இருவரும் பணத்தை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்தனர். அதனால் துருவ் பாரிக், கமலேஷ் பாரிக் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின்படி...
விஜய் 67-ல் இணைந்த கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மேத்யூ தாமஸ் சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் பலம் நடித்து வரும் ‘தளபதி 67’ படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ்மேனன், அர்ஜூன், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்கின்றனர். இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் ‘விஜய் 67’ என அறியப்படுகிறது. இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்தப் படத்தின் அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வரும் நிலையில், அது குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக பகிர்ந்து வருகிறது. முன்னதாக, இந்தப் படத்தில் நடிகர் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி மற்றும் நடிகை ப்ரியா ஆனந்த் ஆகியோர் இணைந்து பணியாற்றி வருவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் அர்ஜூன் மற்றும் இளம் மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன்...