விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் கதாபாத்திர பெயர்கள் என்ன தெரியுமா? சம்பவம் லோடிங்! கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன், ஷிவானி நாராயணன், மைனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த படத்தில் விக்ரம் எனும் ரிட்டயர்ட் போலீஸ் அதிகாரியாக கமல் நடிக்கிறார் என்றும் அவரது மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய்சேதுபதி வில்லனாக விக்ரம் படத்தில் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பவானியாக ஜேடியை அலற வைத்தை விஜய்சேதுபதி சூலக்கருப்பனாக விக்ரம் கமலுடன் நேருக்கு நேர் மோத போகிறார். கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகள் இந்த படத்திலும் வெறித்தனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் எனும் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் இந்த படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து...