கேம்பஸ் வேலைவாய்ப்பில் சென்னை ஐஐடி சாதனை! ரூ.1 கோடியே 98 லட்சம் வரை சம்பளம்! 2020-21 கல்வியாண்டில், வளாக வேலைவாய்ப்புகள் வாயிலாக (campus placement), முன்னெப்போதும் இல்லாத அளவு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகசென்னைஐஐடி தெரிவித்துள்ளது. மேலும், இந்த வளாக வேலைவாய்ப்புகளின் மூலம் ஆண்டுக்கு ரூ. 21.48 லட்சம் சராசரி சம்பளமாக வழங்கப்பட்டதாகவும், அதிகபட்சமாக USD 250,000 (இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடி 98 லட்சம் ஆகும்) வரை பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 2021-22ம் கல்வியாண்டில் இரண்டு கட்டமாக நடைபெற்ற வளாக வேலைவாய்ப்புகளில் 380 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 1,199 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கூடுதலாக, Summer Internship மூலம் கிடைத்த 231 (pre placement offer) ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 1,430 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 2018-19ம் கல்வியாண்டில் கிடைத்த 1,151 வேலைவாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும். இதுகுறித்து, சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், "14 நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 45 சர்வதேச வேலைவாய்ப்புகளும் இதில் அடங்கும். இந்த எண்ணிக்கைய...