சேலம் பெரியார் பல்கலை. தொலைதூர படிப்பு செல்லாது - யுஜிசி(UGC) அறிவிப்பு!
சேலம் பெரியார் பல்கலை. தொலைதூர படிப்பு செல்லாது - யுஜிசி(UGC) அறிவிப்பு! சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையத்தின் மூலம் இளங்கலை, முதுகலையில் பல்வேறு பாடப்பிரிவுகள் தொலைநிலை கல்வியாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது எனவும், மாணவர்கள் இதில் சேர வேண்டாம் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு(University Grants Commission) செயலாளர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெரியார் பல்லைக்கழகத்தில் கடந்த 2007 - 2008 கல்வியாண்டு முதல் 2014 - 2018 வரையிலும், அதனைத் தொடர்ந்து 2019 - 2020 கல்வியாண்டிற்கும் தொலைதூர முறையில் பட்டப்படிப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தில் முழு நேர இயக்குனர் இல்லாதது, போதிய முழு நேர பேராசிரியர்கள் இல்லாதது, போதிய பேராசிரியர்கள் அல்லாத பணி ய...